பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான, குஷ்பு மகள் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை நடிகை குஷ்பு வெளியிட்டு, தன்னுடைய மகளின் கனவு நிறைவேறி விட்டதாகவும் கூறி இருந்தார்.

இந்த புகைப்படத்தில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா, முன்பை விட மிகவும் ஒல்லியாக காட்சியளிக்கிறார். புசு புசுனு இருக்கும் இவரின் கன்னங்கள், சற்று ஒடுங்கி போய் உள்ளது.

16 வயதாகும் இவர், தற்போது தீவிர உடல் பயிற்சிகள் மேற்கொண்டு, உடல் எடையை குறைத்து வருவது இதில் இருந்து தெரிகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனான இந்த சந்திப்பு, தற்போது குஷ்பு நீண்ட இடைவெளிக்கு பின், தலைவருடன் இணைந்து நடிக்க உள்ள 168 ஆவது படப்பிடிப்பின் போது நிகழ்ந்துள்ளது.

'தர்பார்' படத்தை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என மூன்று நடிகைகள் நடிக்க உள்ளனர்.

அம்மா குஷ்புவுடன் படப்பிடிப்பிற்கு சென்றபோது அனந்திதா ரஜினியுடன் எடுத்து கொண்ட இந்த புகைப்படத்தின் மூலம், அவரின் நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டதாகவும், இந்த நிகழ்வின் போது, தன்னுடைய மகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், மகளுக்காக நேரம் ஒதுக்கியமைக்கு தன்னுடைய நன்றியையும் குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.