நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் எனக்கூறி பீதியைக் கிளப்ப வேண்டாம் என குஷ்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், சோசியல் மீடியா வாயிலாக மீனாவின் கணவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்… உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

Scroll to load tweet…

அந்த வகையில் நடிகை குஷ்பு இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : மீனாவின் கணவர் சாகர் இறந்த செய்தி அறிந்து மனமுடைந்து போனேன். நுரையீரல் பிரச்சனையால் அவர் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். அவரை இழந்து வாடும், மீனா மற்றும் அவரது குழந்தைக்கு என் ஆழ்ந்த இரங்கல். வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இதையும் படியுங்கள்... நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் பின்னணி என்ன?... அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள்

Scroll to load tweet…

மற்றொரு பதிவில் மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். அவர் மாதங்களுக்கு முன்னர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அப்போது அவரது நுரையீரலில் பாதிப்பு தீவிரமானதால் தான் தற்போது அவர் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் எனக்கூறி பீதியைக் கிளப்ப வேண்டாம் என குஷ்பு கேட்டுக்கொண்டுள்ளார்.