சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோர தாண்டவம் தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டிபடைக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 827 ஆக உள்ளது. இதுவரை இந்த கொடூர வைரஸால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பதற்காக, பல்வேறு தளர்வுகளுடன் ஜுன் 30ம் தேதி வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து197 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!


மும்பையில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கடும் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இப்படி கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மும்பையில் வசித்து வந்த நடிகை குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துக்கமான செய்தியை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசியல் மற்றும் சினிமாவில் முன்னணி பிரபலமாக வலம் வரும் குஷ்புவின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த இழப்பிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.