தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு கொடி கட்டி பறந்தவர் குஷ்பூ. சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என குஷ்பூ உடன் ஜோடி போட்டு நடிக்காத முன்னணி நாயகர்கள் இல்லை என்று சொல்லலாம். தற்போதும் சினிமாவில் நடித்து வரும் குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்த குஷ்பூ, ரசிகர்களின் தரம் தாழ்ந்த கமெண்ட்ஸ்களால், டுவிட்டர் கணக்கையே நீக்கிவிட்டார். தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் மகாலட்சுமி சீரியலில் பிசியாக நடித்து வரும் குஷ்பூ, இன்ஸ்டாகிராமில் மட்டும் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 

சமீபத்தில் விஷால் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் குஷ்பூ. அதற்கு பார்ட்னர்ஸ் இன் கிரைம் என டேக் செய்திருந்தார். அதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் அனகோண்டாவும், அமேசானும் என கமெண்ட் செய்திருந்தார். நடிகை ஸ்ரீரெட்டி விஷாலை அனகோண்டா என சாடியிருந்ததை குறிக்கும் விதமாக அப்படி கமெண்ட் செய்துள்ளார் போல. அதைப் பார்த்து கடுப்பான குஷ்பூ, உங்க அம்மா என்ன  FLIPKART-ஆ என பதிலடி கொடுத்துள்ளார். 

அந்த அதிரடி பதிலடியைப் பார்த்த அவரது ரசிகர்கள் குஷ்பூவை வெகுவாக பாராட்டியுள்ளனர். இருப்பினும் ஒருசில நெட்டிசன்கள் கேவலமா கமெண்ட் போட்டவனை மட்டும் திட்டாமல் ஏன் அவன் அம்மாவை எல்லாம் பேசுறீங்க, அப்படி பேசாதீங்க மேடம் என அட்வைஸ் செய்துள்ளனர். பிரபலங்களின் பதிவிற்கு ரசிகர்கள் நல்லபடியாக மட்டுமே கமெண்ட்ஸ் போட வேண்டும் என்பது இல்லை, ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இப்படி தாறுமாறாக கமெண்ட்ஸ் போட்டால் இப்படித் தான் வாங்கி கட்டிக்கணும்.