தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. அவரது கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

இதையும் படிங்க: இந்த குட்டி பாப்பா இரண்டு பேரும் யாருன்னு தெரியுதா?... இவங்க தான் இப்ப சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்கள்...!

எந்த கொழு, கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அதனாலேயே பட வாய்ப்புகளை இழந்தார். சமீபத்தில் தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து ஹன்சிகா நடித்த மகா படம் கடைசி, அதை தவிர குட்டி குஷ்பு கைவசம் படங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் உடல் எடையை குறைத்த ஹன்சிகா பட வாய்ப்புகளுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார். தனது இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு தினமும் ஹன்சிகா வெளியிடும் அதிரடி போட்டோஸ் லைக்குகளை குவித்துவருகிறது. 

தனது புது லுக்கால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த ஹன்சிகாவிற்கு அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை.நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஹன்சிகாவிடம் பிகினி போட்டோவை பகிரும் படி கோரிக்கை விடுத்து வந்தனர். அதையும் பூர்த்தி செய்த ஹன்சிகா மகா பட ஷூட்டிங்கை முடித்த கையோடு மாலத்தீவிற்கு சென்று பிகினியில் ரக ரகமாய் போஸ் கொடுத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு   ஹன்சிகா மோத்வானி மீண்டும் தனது பிகினி தரிசனம் கொடுத்து திக்குமுக்காட வைத்தார். கறுப்பு நிற பிகினியில் கையில் சரக்கு கிளாஸுடன் ஹன்சிகா கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்தனர். 

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

ஹன்சிகாவின் ஹாட் போஸை பார்த்து ரசிகர்களுக்கு தான் போதை ஏறுகிறது என்று பார்த்தால், சக நடிகைகளான குஷ்பு, த்ரிஷாவையே வாய்பிளக்க வைத்துவிட்டார். கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் விதமாக தண்ணீரில் நின்றபடி ஹன்சிகா கொடுத்த போஸைப் பார்த்த குஷ்பு, வாவ் என வாய்பிளந்துள்ளார். த்ரிஷாவோ பெருமூச்சு விட்டுள்ளார். ஒற்றை ஹாட் போட்டோவில் பெண்களையே பொறாமைப்படவைத்துவிட்டார் நம்ம ஹன்சிகா....!