இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இளமை கால புகைப்படங்களை ட்விட்டரில் ஷேர் செய்து வருகிறார். 

1980 முதல் இன்று வரை சினி துறையிலும் சரி... தற்போது அரசியலிலும் சரி ஜொலித்து வருபவர் நடிகை குஷ்பூ. 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழகத்தில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் குஷ்புவை தவிர வேறு யாருக்கும் இருந்தது இல்லை. ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், சரத்குமார், பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்கள் தங்களது படத்தில் நடிக்க வைக்க முதலில் தேர்வு செய்வது குஷ்புவை தான். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: “நாயகி” சீரியல் நடிகை வித்யாவா இது?... குட்டை டவுசரில் கவர்ச்சி தூக்கலாக கொடுத்த ஹாட் போஸ்...!

மகாராஷ்டிராவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த குஷ்பூ முதன்முதலாக கலியுக பண்டவலு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழைத் தவிர்த்து மலையாளம் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு, 2 பெண் பிள்ளைகளுக்கு தாயாக மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வருகிறார். 

இதையும் படிங்க: ‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

அரசியல் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து பணியாற்றி வந்த குஷ்பு, இடையில் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். தற்போது வரை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்பு சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வருகிறார். மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது முதல் பட அப்டேட்டுகள் வரை அனைத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துகொள்கிறார். 


தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த அண்ணாத்த பட ஷூட்டிங் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

இதையும் படிங்க: நயன்தாரா என்ன யோக்கியமா..? வாண்டடாக வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இளமைக்கால புகைப்படங்களை ட்விட்டரில் ஷேர் செய்து வருகிறார். 14 வயதில் தான் எப்படி இருந்தேன் என்று குஷ்பு பகிர்ந்துள்ள அசத்தல் புகைப்படம், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போது எனக்கு 14 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோவில் குஷ்புவின் அழகை பார்த்து பிரம்மித்து போன ரசிகர்கள் லைக்குகளை வாரிக்குவிக்கின்றனர்.