Asianet News TamilAsianet News Tamil

தன் மகளின் ஆசை; ரசிகர்களை ஈர்க்க விஜய் சேதுபதி எடுத்த முடிவு ....

விஜய் சேதுபதி தனது மகள் ஸ்ரீஜாவுடன் நடித்துள்ள முகிழ் திரைப்படம் திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.
 

Actress Kozhikode Saratha passed away due to ill health.
Author
Chennai, First Published Nov 9, 2021, 4:09 PM IST

பிரபல நடிகர் விஜய் சேதுபதி நாயகன், வில்லன், சிறப்பு தோற்றம் என தனக்கு வரும் அனைத்து வாய்ப்புகளிலும் தோன்றுபவர். மாஸ்டர் படத்தில் சிறந்த வில்லனாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்த விஜய் சேதுபதி,  தற்போது லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். நடிப்போடு தயாரிப்பு பணியையும் தன கையில் எடுத்துள்ள இவர் ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா,மேற்கு தொடற்சி மலை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு அருண் குமார் இயக்கத்தில் வெளியான சிந்துபாத் திரைப்படத்தில் தனது மகன் சூர்யாவுடன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தை வன்சன் மூவிஸ் தயாரிக்க அஞ்சலி நாயகியாக நடித்திருந்தார். மிதமான வெற்றியை மட்டுமே பெற்றிருந்த இந்த படம் மூலமாக விஜய் சேதுபதி தனது வாரிசான சூர்யாவை அறிமுகப்படுத்தினார்.

Actress Kozhikode Saratha passed away due to ill health.

இந்நிலையில் தனது மகளான ஸ்ரீஜாவின் நடிப்பு ஆசையை நிறைவேற்ற 1மணி நேர சிறப்பு திரைப்படத்தை விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ளார். இதில் நாயகியாக ரெஜினா நடித்துள்ளார். நாய் குட்டியை பார்த்து பயப்படும் மகளின் அச்சத்தை போக்கும் அன்பான தந்தையாக விஜய் நடித்துள்ள இந்த படம் குறும்பட பாணியில் இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இயக்குநர் கார்த்திக் சுவாமிநாதன் உருவாக்கமான இதற்கு . பெண் இசையமைப்பாளர் ரேவா  இசை வடிவம் கொடுக்க, எடிட்டராக  கோவிந்தராஜ், ஒளிப்பதிவாளராக  சத்யா பணிபுரிந்துள்ளார்.

Actress Kozhikode Saratha passed away due to ill health.

"முகிழ்" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி ஸ்ரீஜாவை மையப்படுத்தியே உள்ளது. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் போதுமான வசூலையும் வரவேற்பையும் பெறவில்லை என்றே சொல்லலாம். அதோடு ஒரு மணி நேர காலஅளவு மட்டுமே கொண்டுள்ள இந்த படத்தை ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்குகளில் வெளியிட்டது ஏன் என்கிற கேள்வியும் அப்போது எழுந்தது. இந்த சுழலில்  முகிழ் திரைப்படம் நெட்பிளிக்கஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுவதாக விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios