நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இரண்டு அணியை சேர்ந்தவர்களும், தங்களுடைய தரப்பில் உள்ள நியாயங்களை, தொலைக்காட்சிகளுக்கு, பேட்டி மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை கோவை சரளா, பாண்டவர் அணிக்கு ஆதரவாகவும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் சங்க செயல்பாடுகள் குறித்து பேசியுள்ள அவர் "நடிகர் சங்க தேர்தலில், எந்த குறையும் இல்லை,  நல்லபடியாக போய் கொண்டு இருக்கு.  சந்தர்ப்ப சூழ்நிலையால், பாண்டவர் அணி இரண்டாக போய் உள்ளது. மற்றபடி எந்த ஒரு ஊழலும் இல்லை என தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒரு அணியிடம், இந்த இடம் இருந்த போது, தரிசாகா கிடந்த போது ஏன் யாரும் வாய் திறக்கவில்லை. இப்போது மட்டும் ஏன் இப்படி ஆளாளுக்கு பேசுறாங்க,  இப்போ பேசுறவங்க முதலில் ஏன் பேசவில்லை இது காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையா இருக்கு, என நடிகர் சங்க கட்டிட பணிகள் தொய்வு குறித்து விளக்கம் கொடுத்தார்.

அதே போல் இந்த இடத்தில் நடிகர் சங்க கட்டிடமே வராது, தேர்தலை நடக்காது, என இப்போதுவரை பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சிறிய வீடு கட்டுவதற்கே, பல கஷ்டங்கள் இருக்கு. ஆனால் இவ்வளவு பெரிய கட்டடம் கட்ட எவ்வளவு நாட்கள் ஆகும் யோசித்துப் பாருங்கள் என கூறினார்.

பதவிக்கு ஆசைப்பட்டு தான், விஷால் நடிகர் சங்க தேர்தலில் நிற்கிறாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கோவை சரளா.. "பதவிக்கு ஆசைப்பட்டு நடிகர் சங்கத்தில் புதையலை எடுக்க போறோமா...?  ஒரு அணி என்று இருந்தால் விஷால் மட்டுமே தனியாக ஒரு வேலையை செய்ய முடியாது. அவர் அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யும் போது,  அவர் அந்த பதவியில் இருக்க கூடாதா ? இது ஒரு பொதுச் செயலாளர் பணி என்பதால் அதற்கான அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என கூறினார்.

நாடக நடிகர்களை முன்வைத்தும் பாண்டவர் அணியினரை விமர்சிப்பது பற்றி எழுப்பிய கேள்விக்கு, பாண்டவர் அணியின் தலைவர் "நாசர், பூச்சி முருகன்,  நான் உட்பட அனைவருமே நாடக நடிகர்களாக இருந்து சினிமாவின் உள்ளே வந்தவர்கள்.  எனவே நாடக நடிகர்களின் வாழ்க்கை பற்றி நன்கு  தெரியும். எங்களுடைய அணியில் ஊழல் இல்லை என கூறினார்.