மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை குஷ்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை குஷ்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நடிகையும், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமாக இருப்பவர் குஷ்பு. இவர் அன்மையில் அடினோவைரஸ் என்னும் தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கடற்கரையில் கவர்ச்சி புயலாக மையம் கொண்ட தர்ஷா குப்தா-வின் கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ

இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், எனக்கு காய்ச்சல், தொண்டை வலி, சோம்பல் ஏற்பட்டுள்ளதால் நல்ல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு திரையுலகத்தை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: சேலையில் இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்து.... இளசுகளை இம்சிக்கும் ரம்யா பாண்டியன் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

இந்த நிலையில் அவரது உடல்நிலை தேறியதை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். சிறிது நாட்களுக்கு பயணங்களை தவிர்க்க வேண்டும். என் உடல்நலம் குறித்த உங்கள் அன்பிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…