திடீரென மருத்துவமனையில் அனுமதி... நடிகை குஷ்புவுக்கு என்னாச்சு?

நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்புவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Actress Khushbu hospitalized in hyderabad apollo

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் தற்போது அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறார். தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். சமூக வலைதளமான டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, அதில் தற்போது மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

அந்த பதிவில், நான் சொன்னது போல், காய்ச்சல் மோசமானது. அது என்னைப் பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். உடல் மெதுவாகச் சோர்வடையும் போது அது காய்ச்சலுக்கான அறிகுறிகள் அதனை புறக்கணிக்காதீர்கள். தற்போது படிப்படியாக குணமாகி வருகிறேன். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வருகின்றனர். விரைவில் குணமடைந்து வருமாறு நடிகை குஷ்புவுக்கு திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் பி கே ரோசி திரைப்படவிழா 2023! இன்று அமோகமாக துவங்கியது!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios