தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் கடைசியாக விஜய் உடன் “சர்கார்” படத்தில் நடித்தார். அதன் பின்னர் கிட்டதட்ட 2 ஆண்டுகள் கழித்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் “பெண்குயின்”. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு ஜோதிகாவின்“பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை போலவே, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “பெண்குயின்” திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

“மகாநடி” படத்திற்காக தேசிய விருது பெற்ற பின்னர் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்,  த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கர்ப்பிணியாகவும், மகனை தொலைத்த தாயாகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக தன்னுடைய உடல் தோற்றைத்தையே முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “அண்ணாத்த” படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தில் இருந்து 20 முதல் 30 சதவீத தொகையை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார். கொரோனா பிரச்சனையால் ஒட்டுமொத்த திரையுலகமே கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க:  சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

சமீபத்தில் கீர்த்தி சுரேஷுன் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ் குமார் சினிமாவை மீட்க வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொண்டு, தயாரிப்பாளர்களுக்கு தோள்கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இதையடுத்து பிரபல நடிகையான உங்களுடைய மகளின் சம்பளத்தை முதலில் குறைக்க சொல்லுங்க...அப்புறம் பிறரை சொல்லலாம் என சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து பெண்குயின் பட ரிலீஸை முன்னிட்டு பேட்டி ஒன்றை அளித்துள்ள கீர்த்தி சுரேஷ், கொரோனா பிரச்சனை காரணமாக தனது சம்பளத்தில் இருந்து 20 முதல் 30 சதவீதம் வரை குறைத்து கொள்ள உள்ளதாகவும், சினிமாவில் உள்ள அனைவரும் இதை செய்ய வேண்டும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.