Asianet News TamilAsianet News Tamil

கீர்த்தி சுரேஷுக்காக ஒன்றிணையும் டாப் ஹீரோக்கள்...நாளை ரசிகர்களுக்கு காத்திருக்கிறது அதிரடி விருந்து...!

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Actress Keerthy Suresh Penguin Trailer out Tomorrow
Author
Chennai, First Published Jun 10, 2020, 6:54 PM IST

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் “பெண்குயின்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு ஜோதிகாவின்“பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை போலவே, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “பெண்குயின்” திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

Actress Keerthy Suresh Penguin Trailer out Tomorrow

தேசிய விருது பெற்ற பின்னர் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், “பெண்குயின்” படத்தில் நிறைமாத கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என பல பரிமாணங்களில் நடித்துள்ளார். இதற்காக தன்னுடைய உடல் தோற்றைத்தையே முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளார். 

Actress Keerthy Suresh Penguin Trailer out Tomorrow

இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஒரு நிமிடம் 19 விநாடிகள் ஓடக்கூடிய டீசரில் குழந்தையை காணாமல் தவிக்கும் தாயாக கீர்த்தி சுரேஷ் தனது ஏதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். டீசரின் இறுதியில் காட்டப்படும் காட்சிகள்... படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்திருந்தது. இதுவரை யூ-டியூப்பில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. 

Actress Keerthy Suresh Penguin Trailer out Tomorrow

இதையும் படிங்க: கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் அமலா பால்... கெத்து போஸைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

“பெண்குயின்” படத்தின் டீசரை த்ரிஷா, மஞ்சு வாரியர், சமந்தா, டாப்ஸி ஆகியோர் வெளியிட்டனர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரை அந்தந்த மொழிகளில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் 4 நடிகைகள் வெளியிட்டனர். தன்னுடன் பணிபுரியும் நடிகைகளை போட்டியாக மட்டுமே நினைக்காமல் சமகால நடிகையான கீர்த்தி சுரேஷுக்காக 4 நடிகைகள் முதன் முறையாக ஒன்றிணைந்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இதெல்லாம்... வைரலாகும் “அன்றே கணித்த சூர்யா” மீம்ஸ்... ஸ்பெஷல் தொகுப்பு...!

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை மதியம் 12 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் தமிழ், மலையாளம், தெலுங்கு பட டிரெய்லர்களை அந்தந்த மொழியின் டாப் ஸ்டார்களான தனுஷ், மோகன் லால், நானி ஆகியோர் வெளியிட உள்ளனர். ஏற்கனவே சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளியான டீசர் மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ள நிலையில், டிரெய்லரை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios