Asianet News TamilAsianet News Tamil

இதுக்கு நடிக்கலைன்னே சொல்லியிருக்கலாம்... கீர்த்தி சுரேஷ் கேட்ட சம்பளத்தால் அதிர்ச்சியான தயாரிப்பாளர்...!

தெலுங்கில் மெகா ஸ்டாருக்கு தங்கையாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

Actress Keerthy Suresh asking huge amount for vedhalam telugu remake
Author
Chennai, First Published Aug 14, 2021, 1:57 PM IST

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2015ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். வீரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா - அஜித் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் தல அஜித் , காசுக்காக எதையும் செய்யும் ரவுடி, தங்கைக்காக உயிரையும் கொடுக்கும் பாசக்கார அண்ணன் என இருவேறு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படம் வசூல் மற்றும் விமர்சன  ரீதியாக வேற லெவலுக்கு ஹிட்டடித்தது. 

Actress Keerthy Suresh asking huge amount for vedhalam telugu remake

இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாக நீண்ட நாட்களாகவே பேச்சு  அடிபட்டு வருகிறது. இதில் செய்யப்பட்டால் தமிழில் தல அஜித் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதும் உறுதி செய்யப்பட்டது. ஸ்ருதி ஹாசன் கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியான. வேதாளம் படத்தில் அஜித்திற்கு அடுத்தபடியாக அவருக்கு தங்கையாக நடித்த லட்சுமி மேனன் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. 

Actress Keerthy Suresh asking huge amount for vedhalam telugu remake

சொல்லப்போனால் கதையே லட்சுமி மேனனை சுற்றித் தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். தமிழில் தல அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் பக்கவாக பொருந்தியிருப்பார். இதேபோல் தெலுங்கில் மெகா ஸ்டாருக்கு தங்கையாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷிடம் தயாரிப்பாளர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாக செய்தி வெளியிட்டிருந்தோம். ஏற்கனவே அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் மெகா ஸ்டாருக்கு தங்கையாக நடிக்க சம்மாதம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கீர்த்தி ரூ.3 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதனால் தயாரிப்பாளர் தரப்பு தற்போது சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி.  

Follow Us:
Download App:
  • android
  • ios