நடிகை சுனேனா, ஏற்கனவே திருமணம் ஆன நடிகர் கிருஷ்ணாவை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக, நேற்று ஒரு திரியை கிள்ளி போட்டு வெடிக்க செய்த, பிரபல பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.

வாரிசு நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு, நடிகையர் திலகம் 'சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு' படமான 'மகாநடி மிகப்பெரிய பிரேக் கொடுத்தது.

இந்த படத்தில் நடித்ததற்காக, இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. சினிமாவில் கிடைத்த இடத்தை தக்க வைத்து கொள்ள, ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், ஒவ்வொரு படத்திற்கும் தன்னை வித்தியாசப்படுத்தி நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திலும், இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் 'குயின்' ஆகிய இரண்டு தமிழ் படங்கள் இவரின் கை வசம் உள்ளது.

மேலும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இரண்டு படத்தில் நடித்து வருகிறார். விரைவில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவரின் திருமண பேச்சுகள் தற்போது திரையுலகை பரபரப்பாக்கி உள்ளது. கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், கீர்த்தி சுரேஷின் தந்தை பாஜகவில் முக்கிய பங்கு வகித்து வருவதால், பாஜகவை சேர்ந்த, தொழிலதிபர் ஒருவருக்கு, கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிட்டார் என்றும், இதற்கு கீர்த்தி சுரேஷும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார்.

அதே நேரத்தில் தற்போது  திருமணத்திற்கான அணைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறியுள்ளார். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை கீர்த்தி சுரேஷ் அல்லது அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் கூற வேண்டும். உண்மையான தகவல் வெளியாகும் வரை காத்திருப்போம்...!