வைகோவை டெல்லிக்கு அனுப் சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமுக எனக்கூறி நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. அவர் திமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் திமுக ஆட்சியில் இந்த வழக்கு போடப்பட்டது.

 

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ’’2009-ல் ஈழ ஆதரவு பேச்சுக்காக வைகோ மேல் தேசத்துரோக வழக்கு போட்டது யார்? அன்றைய திமுக அரசு. இதை தமிழர்கள் மறந்தாலும் தர்மதேவதை மறக்கவில்லை. எண்ணையை தடவிக்கிட்டு மணல்ல புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் - பழமொழி.

எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும். - புதுமொழி. டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமுகழகம்! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே’’ எனப்பதிந்துள்ளார். அவரது இந்த பதிவிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

’’ஈழ ஆதரவு பேச்சிற்கல்ல. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக அப்போதைய திமுக தலைமையிலான அரசு வழக்கு போட்டது. ஐபிசி படி அப்படி பேசுவது குற்றம். இதுல நீங்க வக்கீலுக்கு வேற படிச்சிருக்கீங்க’’ எனத் தெரிவித்துள்ளனர். .