டெங்கு, மலேரியாவை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நடிகை கஸ்தூரி சாடி உள்ளார்.

தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருப்பது உதயநிதியின் சனாதன பேச்சு தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேசியா, கொரோனாவை போல் சனாதனத்தையும் ஒழிப்பதே சரியாகும் என பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

குறிப்பாக பாஜகவினர் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவே உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சு. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... மன்னிப்பு கேள்.. போலீசில் புகார்.. 10 ஆண்டு பிளாஷ்பேக்.. சனாதனம் பற்றி உதயநிதி பேச்சுக்கு தலைவர்கள் ரியாக்சன்

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி, உதயநிதியை டுவிட்டரில் கடுமையாக சாடி இருக்கிறார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே; அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி. அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க!” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இப்படி தனது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பினாலும், அதற்கு தக்க பதிலடியும் கொடுத்துள்ளார் உதயநிதி. தன் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை எதிர்க்க தான் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே... என்ன வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்-பாஜகவிற்கு பதிலடி கொடுத்த உதயநிதி