80களுக்கு முன்பிலிருந்தே சினிமாவில் நடித்து வருவதால், அப்போதைய நடிகர், நடிகைகள் குறித்து ஏடாகூடமான விஷயங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிக்கையாளரான இவர், நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசியதன் மூலம் மிகவும் பிரபலமானார். யூடியூப்பில் நடிகர், நடிகைகள் குறித்து அந்தரங்க தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 80களுக்கு முன்பிலிருந்தே சினிமாவில் நடித்து வருவதால், அப்போதைய நடிகர், நடிகைகள் குறித்து ஏடாகூடமான விஷயங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
அந்தவகையில், சமீபத்தில் இவர் பேசிய வீடியோவில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ஓவியா ஆகியோர் குறித்து பேசி இருந்தார். குறிப்பாக கஸ்தூரி குறித்தும் கொச்சையாக பேசி இருந்தார். இதைப்பார்த்த ரசிகர் ஒருவர், டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரியின் பார்வைக்கு இந்த வீடியோவை கொண்டு சென்றார்.

இதைப் பார்த்த கஸ்தூரி பயில்வான் ரங்கநாதனை ஒரே டுவிட்டில் டர்ராக்கி உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “பீயை மிதிக்க கூடாதுன்னு தள்ளி நடக்கிறோம், அது பயம் இல்லை. கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பாத்தேன்...இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இதற்காக நடிகர், நடிகைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆதரவளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
