தேர்தல் முடிவுகள் குறித்து தான் கூறிய கருத்துக்களை மீடியாக்கள் திரித்துக்கூறி குழப்பம் ஏற்படுத்துவதாக பிரபல நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் குறித்து தான் கூறிய கருத்துக்களை மீடியாக்கள் திரித்துக்கூறி குழப்பம் ஏற்படுத்துவதாக பிரபல நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
மதுரை மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த நடிகை கஸ்தூரி பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி ளித்தார். அப்போது பேசிய அவர்,”தற்போது வெளிவரும் கருத்துக் கணிப்புகளின்படி மக்களவைத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நினைக்கிறேன். தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பினாமி ஆட்சி என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இது கண்டிப்பாக தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும். ஆனால் மத்தியில் பெரிய அளவில் மாற்றம் வர வாய்ப்பில்லை.
காங்கிரஸ் பல மாநிலங்களில் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம். மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் எனது நண்பர். அவரது செயல்பாடுகள் எனக்கு நன்கு தெரியும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மதுரைக்கு உறுதியாக நல்ல பல திட்டங்களைக் கொண்டு வருவார்.
எந்த ஒரு கட்சியும் இந்தத் தேர்தலில் பெண்களுக்கு சரிசமமாக வாய்ப்பு அளிக்கவில்லை. நாம் தமிழர் கட்சிதான் 40 தொகுதிகளில் 20 தொகுதியை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான திமுகவில்கூட 2 பெண்கள் மட்டுமே, அதுவும் வாரிசுகள்தான் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் தோறும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முரண்பட்ட கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்பதில் சிக்கல் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
அவரது அந்தப் பேட்டிக்கு எந்த முனையிலிருந்து எதிர்ப்பு வந்ததோ தெரியவில்லை. தற்போது தனது கருத்துக்கள் திரித்துக் கூறப்படுவதாகக் கூறியுள்ள அவர், “கஸ்தூரியின் கருத்து, இல்லை கணிப்பு, இல்லை ஆருடம்னு போட்டிருந்தா கூட ஓகே. ஆனா "நம்பிக்கை'னு போட்டு நம்ம மேல ஒரு கட்சியின் சாயத்தை பூசும் நுட்பம் இருக்கே....அதுதான் மீடியா. 🤣😎 ஒரே பேட்டிதான், ஆளாளுக்கு தேவைக்கு தகுந்தபடி வெட்டி ஒட்டி விளையாடுறாங்க😁” என்று பதிவிட்டிருக்கிறார்.
