தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகள் அனைவரும், ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கிறார்களா என்றால் அது சந்தேகம் தான். அந்த வகையில், கடந்த 2006 ஆண்டு வெளியான 'தூத்துக்குடி' படத்தில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா.  

தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகள் அனைவரும், ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கிறார்களா என்றால் அது சந்தேகம் தான். அந்த வகையில், கடந்த 2006 ஆண்டு வெளியான 'தூத்துக்குடி' படத்தில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் 'கருவாப்பையா... கருவாப்பையா... என்கிற பாடம் மூலம் 
ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். மேலும், 'பிறப்பு' படத்தில் இடம்பெறும் 'உலக அழகி நான் தான்' என்கிற பாடலும் மிகவும் பிரபலம். 

இந்த படங்களை தொடர்ந்து, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவரின் தங்கை படிப்பிற்காக திரையுலகிற்கு சிறிது காலம் டா டா காட்டி விட்டு மும்பை பறந்தார்.

தற்போது தங்கையின் படிப்பு முடிந்து, சென்னை திரும்பிய கார்த்திகா பிரபல மால் ஒன்றில் படம் பார்க்க சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்து கொண்டார்களாம். தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்து விட்டாராம்.

தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தும், அதனை மறுத்து விட்ட கார்த்திகா, நடித்தான் வெள்ளித்திரையில் தான் நடிப்பேன் என அடம்பிடித்து வருகிறாராம். மேலும் சில இயக்குனர்களும் இவரை சந்தித்து கதை சொல்லி வருகிறார்களாம். 

விரைவில் நல்ல கதையம்சம் கொண்ட, படங்களில் தன்னை ரசிகர்கள் மீண்டும் பார்க்கலாம் என உறுதியாக கூறுகிறார் கார்த்திகா.