90களில் பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னிகளாக வலம் வந்தவர்கள் கரிஷ்மா கபூரும், ரவீணா டாண்டனும், ஆனால் என்ன காரணமோ தெரியாது இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்தாலே பிடிக்காது. இது பாலிவுட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலருக்கும் அந்த செய்தி தெரியும். அப்படி எதிரியாக வலம் வந்த இருவரும் இப்போது நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள். அதற்கு காரணம் கரிஷ்மாவின் மகள் சமைரா கபூர் மற்றும் ரவீணாவின் மகள் ரஷா தான். இரண்டு நடிகைகளும் ஒரே பள்ளியில் தான் படிக்கின்றனர்.மகள்களை பள்ளியில் விட செல்லும் போது இருவரும் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்த சந்திப்பே நாளடைவில் நட்பாக மாறிவிட்டது. 

இப்போது இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும், முன்னணி நடிகைகளாக வலம் வந்த காலத்தில் இருவரும் சின்னப்புள்ள தனமாக அடித்துக்கொண்ட செய்தியை கேள்விப்பட்டு ரசிகர்கள் வாய்பிளக்கின்றனர். இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன இயக்குநர் ஃபரா கான் தான் அந்த ரகசியத்தை போட்டுடைத்துள்ளார். 

இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?

1994ம் ஆண்டு ஆதிஷ் ஃபீல் தி பையர் என்ற படத்தில் கரிஷ்மா கபூர் மற்றும் ரவீணா டாண்டன் இணைந்து நடித்தனர். சஞ்சய் குப்தா இயக்குநராக அறிமுகமான அந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஒருமுறை கூட பேசிக்கொண்டது கிடையாதாம். அப்படி ஒரு நாள் பாடல் காட்சி ஒன்றை ஃபரா கான் திட்டமிட்டுக்கொண்டிருந்த போது, செட்டிலேயே கரிஷ்மாவும், ரவீணாவும் சண்டை போட்டுள்ளனர். தங்களது தலையில் இருந்த விக்கை கழட்டி ஒருவரை ஒருவர் மாறி, மாறி அடிக்க ஆரம்பித்துள்ளனர். தங்களது ஹை ஹீல்ஸாலும் மாறி, மாறி மிதித்துக் கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க:  பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!

பிரபல நடிகைகள் இருவர் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இப்படி சண்டையிட்ட சம்பவம் இயக்குநர், நடிகர்கள் அமீர் கான், சல்மான் கான் ஆகியோரை கடுப்பேற்றியுள்ளது. அதனால் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது இருவரையும் ஒரு தூணில் கட்டிவைத்துள்ளனர். நீங்கள் இரண்டு பேருமே பேசிக்கொண்டால் தான் கழட்டி விடுவோம் என இயக்குநர் திட்டவட்டமாக கூறிவிட்டராம். இப்பொழுது இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறியிருந்தாலும் 90களில் அடித்துக்கொண்ட சம்பவம் விநேதமாக பார்க்கப்படுகிறது.