மிஸ் சென்னை பட்டம் பெற்ற கனிகா, பாடகியாக இருந்து பின்னாளில் நடிகையாக மாறியவர். மலையாள திரையுலகில் பிரபலமான இவர், மணிரத்னம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கிய "பைவ் ஸ்டார்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் 'எதிரி', 'ஆட்டோகிராப்' உள்ளிட்ட படங்களில் நடித்த கனிகா. இறுதியாக "வரலாறு" படத்தில் அப்பா அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். 

நடிகையாக மட்டுமல்லாமல் தனது இனிமையான குரலால் பல நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். சச்சின் படத்தில் ஜெனிலியா, அந்தியன் படத்தில் சதா, சிவாஜி படத்தில் ஸ்ரேயா ஆகியோருக்கு குரல் கொடுத்துள்ளார். 

2008ம் ஆண்டு ஷியாம் என்ற அமெரிக்க தொழிலதிபரான ராதாகிருஷ்ணன் என்பவரஒ திருமணம் செய்து கொண்டார். கனிகாவிற்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். தற்போது 10 வயதாகும் மகன் சாய் ரிஷியுடன் கனிகா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் பெரும்  சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சாகச விரும்பியான கனிகா, ஸ்கூபா டைவிங்கிற்கு சென்ற போது மகன் சாய் ரிஷியுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். ஸ்லீவ் லெஸ் டாப், அரைகால் டவுசர் உடன் படுகவர்ச்சியாக இருக்கும் கனிகாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


அதைப்பார்த்து பல நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டாலும், நீண்ட நாட்களுக்கு அப்புறம் மகனுடன் இப்படிப்பட்ட உடையில் போட்டோ போடனுமா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.