ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏ.எல்.ரவி இயக்கி வரும் தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனா ரனாவத்தின் உருவம் வழக்கம் போலவே பெரும் விமர்சனங்களுக்கு ஆளானது. ஆரம்பம் முதலே விமர்சனங்களில் சிக்கித் தவித்த கங்கனா, எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். பரத நாட்டியம் மற்றும் தமிழ் கற்றார், எப்படியாவது ஜெயலலிதாவாக காட்சியளிக்க வேண்டும் என அரும்பாடுபட்டார். 

அமெரிக்கா வரை சென்று ஜெயலலிதா போன்று மேக்-அப் டெஸ்ட் எடுத்தார் கங்கனா. வெறும் மேக்-அப் மட்டும் போதாது உடல் எடையிலும் ஜெயலலிதா போல தெரியும் வேண்டும் இயக்குநர் விஜய் கங்கனாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்காக கங்கனா ரனாவத் எந்த நடிகைகளும் செய்யத் துணியாத செயலை செய்துள்ளார். உடல் எடையை கூட்ட வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுள்ளார். மேலும் தொடை, இடுப்பு ஆகிய பகுதிகளில் கூடுதல் வெயிட் தேவை என்பதால், உடல் எடையை கூட்ட பயன்படும் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும் கங்கனா வெளியிட்ட பகீர் தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

தலைவி படத்திற்காக 6 கிலோ வரை எடை கூடியுள்ள கங்கனா, ஜெயலலிதாவாக நடிப்பதற்காக அனைத்து கஷ்டங்களையும் ஏற்க தயாராக உள்ளார். உருவம் சரியில்லை, வசன உச்சரிப்பில்லை என நெட்டிசன்கள் ஈஸியாக கங்கனாவை இணையதளத்தில் ட்ரால் செய்து வந்த நிலையில், தலைவி படத்தில் நடிப்பதற்காக ஈடுபாட்டுடன் கங்கனா எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைவரையும் சிந்திக்கவைத்துள்ளது.