மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையாக கொண்டு “தலைவி”  என்ற படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் திரையுலகின் டாப் ஹீரோயினான கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமியும், அவரது மனைவி ஜானகியாக  மதுபாலாவும் நடிக்கின்றனர். கருணாநிதியாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இந்தி நடிகை கங்கனா ரனாவத்தை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு விமர்சித்தனர். இதை சவாலாக எடுத்துக் கொண்ட படக்குழுவினர் ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். கட்சி பார்டர் போட்ட சேலையில் அச்சு அசலாக ஜெயலலிதா போலவே இருந்த கங்கனாவின் தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கங்கனா இப்படித்தான், தன் மீது வீசப்படும் விமர்சனங்களை வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றக்கூடியவர். 

இதற்கு முன்னதாக மணிகர்ணிகா என சரித்திர கதை இயக்கி நடித்திருந்தார். இந்நிலையில் அவர் அண்மையில் நீண்ட வருட போராட்டத்திற்கு முடிவுக்கு வந்த அயோத்தி ராமர் கோவில் சம்பவம் திரைப்படமாக எடுக்கப்போகிறாராம். இது குறித்து அவர் இப்படத்தில் தான் நடிக்கப்போவதில்லை எனவும், இயக்குவதில் தான் அதிக கவனம் செலுத்தப்போவதாகவும், சர்ச்சையான படமாக தான் இதை நினைக்கவில்லை எனவும், அன்பு, நம்பிக், ஒற்றுமையை வெளிப்படுத்தும் படமாக இக்கதை அமையும். எல்லாவற்றை கடந்து தெய்வீகத்தன்மை நிறைந்தது தான் இந்த படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை கங்கனா ரனாவத் சரியாக கையாள்வாரா? என்ற பதற்றம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது.