Tamil serial actress asks her fans to pray for her

அள்ளித்தந்த வானம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி. அதனை தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என பல மொழிப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாகவும், முக்கிய கதாப்பாத்திரங்களிலும் இவர் நடித்திருக்கிறார். பிரபல சின்னத்திரையில் சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியும் இருக்கிறார்.

சின்னத்திரையில் தனது துறு துறு பேச்சால் அதிக அளவிலான ரசிகர்களை சம்பாதித்த இவர், திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். மீண்டும் எப்போது திரையில் உங்களை காணலாம்? என இவரிடம் ரசிகர்கள் கேட்ட போது, இப்போது அம்மாவாக போகிறேன். என்று சந்தோஷமான தகவலை தெரிவித்திருக்கிறார். எனவே திரைத்துறை பக்கம் வர இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகட்டும். என தன் ரசிகர்களுக்கு இவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தன் ரசிகர்களிடம் ஒரு உருக்கமான வேண்டுதலையும் முன்வைத்திருக்கிறார். தனது அம்மா தற்போது இந்த உலகில் இல்லை எனவும், அவரது இழப்பு தன்னை வெகுவாக பாதித்திருக்கிறது எனவும் தெரிவித்த கல்யாணி, என் அம்மாவே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும். எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என கேட்டிருக்கிறார்.