தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தது திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் இருந்து காஜல் அகர்வால் நூலிழையில் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் “ஆச்சார்யா” படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அந்த படத்தில் சொன்ன படி தனக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி த்ரிஷா அந்த படத்தில் இருந்து விலகினார். ஆனால் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக தான் தனது படத்தில் இருந்து த்ரிஷா விலகியதாக மெகா ஸ்டார் மிகப்பெரிய குண்டை தூக்கிபோட்டார். 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!

இவர்களது பனிப்போர் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, ஆச்சார்யா படத்திற்கான ஹீரோயினை படக்குழு தேடி வந்தது. இந்நிலையில் அந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமானார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ள நிலையில், அம்மணிக்கு இந்த படத்தில் பேசப்பட்டுள்ள சம்பளத்தை கேள்விப்பட்டு முன்னணி ஹீரோயின்கள் வாய்பிளந்து நிற்கிறார்களாம்.

இதையும் படிங்க: “என் புருசனை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்”... பிரபுதேவா மனைவி ஆவேசம்...!


தெலுங்கில் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் படத்தில் இருந்து த்ரிஷா விலகியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் எத்தனை கோடி கேட்டாலும் சரி, வேறு ஒரு முன்னணி நடிகையை உடனடியாக ஒப்பந்தம் செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் படக்குழுவினர் தள்ளப்பட்டனர். இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட காஜல் அகர்வால், 2 கோடி ரூபாய் சம்பளம் பேசி வாங்கியுள்ளார். ஒரே பாடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையே ஓரம் கட்டிய காஜல் அகர்வாலை பார்த்து மற்ற நடிகைகள் கடுப்பில் உள்ளனராம்.