தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். 


சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிம்பு - நயன்தாரா காதலித்து வந்த சங்கதி அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதன் பின்னர் சிம்பு - நயன்தாரா காதல் முறிந்தது. இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, பிரபுதேவா இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக “வில்லு” படத்தில் நடித்தார். அப்போது பிரபுதேவாவிற்கும் நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனான பிரபுதேவா, நயனுடனான காதல் காரணமாக மனைவி ரமலத்தை 2011ம் ஆண்டு விவாகரத்து செய்தார். 

திருமணம் வரை சென்ற அந்த காதல் சில சிக்கல்களால் பிரிவில் முடிந்தது. அதன் பின்னர் தற்போது நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த நயன்தாரா, நம்பிக்கை இல்லாததே தனது முந்தைய காதல்கள் பிரிய காரணம் என்றும், நம்பிக்கை இல்லாதவர்களுடன் இருப்பதை விட தனியாக இருப்பது நல்லது என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

இந்நிலையில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் பேட்டி ஒன்றில் நயன்தாராவை தாறுமாறாக விமர்சித்துள்ளார். தற்போது 15 வருடங்களாக நல்ல கணவராக இருந்த பிரபுதேவா, அப்போது நயன்தாராவை காதலித்ததை என்னால் நம்பமுடியவில்லை. இப்போது பிரபுதேவா முற்றிலும் மாறிவிட்டார்.எங்களுக்காக வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இப்ப இருக்கும் பிரபுதேவாவிடம் தோன்றும் மாற்றங்கள் எனக்கும் அவரது குடும்பத்திற்கும் மிகுந்த ஆச்சர்யத்தை கொடுக்கிறது. 

இதையும் படிங்க: குழந்தை பெற்ற பிறகும் குறையாத கவர்ச்சி... பேண்ட் போடாமல் ப்ரீயாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்...!

நயன்தாரா எனது கணவரை திருடிவிட்டார். அடுத்தவரின் கணவரை திருடும் பெண்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். உள்நோக்கத்தோடு என்னிடம் இருந்து எனது கணவரை திருட முயன்ற நயன்தாராவை கைது செய்திருக்க வேண்டும். நயன்தாராவை  நான் எங்காவது பார்த்தால், பார்த்த இடத்திலேயே உதைப்பேன் என்று மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.