Kajal: நிறைமாத கர்பத்துடன் இப்படி குத்தாட்டம் போடலாமா..? காஜல் அகர்வாலை விளாசும் நெட்டிசன்கள்..வைரல் வீடியோ..
Kajal Aggarwal: குழந்தை பிறக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நிறைமாத வயிற்றுடன் காஜல் அகர்வால் போட்ட குத்தாட்டம் வைரலாகி வருகிறது.
நடிகை காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர், தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கர்களுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.
நடிகை காஜல் அகர்வால் திருமணம்:
சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது.
தயான காஜல் அகர்வால்:
இதையடுத்து, கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது துபாயில் தனது கணவர் கெளதம் கிச்சலுவுடன் வசித்து வருகிறார். 30 வயதை கடந்தாலும், அழகில் மெழுகு சிலை போல் தோற்றமளிக்கும் நடிகை காஜல் அகர்வால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.
காஜல் அகர்வால் வளைகாப்பு:
சமீபத்தில் காஜல் அகர்வால், தனது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டார். மேலும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
விளம்பர படத்தில் காஜல்:
அண்மையில் இவர், அவரது தங்கை மகனான இஷான் வலேச்சாவுடன் இணைந்து, ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் நடித்தார். காஜல், அந்த விளம்பரத்தில் உடல் எடை கூடி, முகம் எல்லாம் பெரியதாகி தோற்றமளித்தார். இதையடுத்து, பெட் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.
காஜல் போட்டோ ஷூட் வீடியோ:
இந்நிலையில், குழந்தை பிறக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நிறைமாத வயிற்றுடன் காஜல் அகர்வால் போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். தற்போது அதன் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இதை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும் போது, எதற்கு இந்த விபரீதம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.