தெலுங்கு தொழிலாளர்களுக்காக அறக்கட்டளை ஆரம்பித்து நிதி திரட்டியது மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

இதையும் படிங்க: குழந்தை பெற்ற பிறகும் குறையாத கவர்ச்சி... பேண்ட் போடாமல் ப்ரீயாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்...!
இதனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் கொஞ்சம் உதவினால் பெப்சி தொழிலாளர்களுக்கு கஞ்சி சோறாவது கொடுக்கலாம் என அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் லட்சங்களை வாரி வழங்கினார். ஹீரோக்களுக்கு சமமாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் உண்டு. அவர்களில் நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர வேறு யாரும் உதவிக்கரம் நீட்டியதாக தெரியவில்லை.

இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் செய்த காரியம் தமிழ் திரைப்பட தொழிலாளர்களை மட்டுமல்லாது, கோலிவுட்டையே கொதித்தெழ வைத்துள்ளது. தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் உடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் காஜல். அதேபோல் தெலுங்கிலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!
தெலுங்கு தொழிலாளர்களுக்காக அறக்கட்டளை ஆரம்பித்து நிதி திரட்டியது மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் தான் அவரது படத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கியுள்ள காஜல் அகவால், சும்மா கிள்ளிக்கொடுப்பது போல் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்காக 2 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார். தமிழ் சினிமாவிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு கோடிகளில் சம்பளம் வாங்கும் காஜல் அகர்வாலுக்கு பெப்சி தொழிலாளர்கள் படும் கஷ்டம் மட்டும் எப்படி கண்ணுக்கு தெரியாமல் போனது என்று தெரியவில்லை.
Add Asianetnews Tamil as a Preferred Source

