‘நான் ‘அட்டக்கத்தி’பட நாயகன் தினேஷ் மாதிரி. அடிக்கடி காதலர்களை மாற்றிக்கொண்டே இருப்பேன்.அதேபோல் காதலர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக அறிவித்திருகிறார் நடிகை காஜல்.

இரு தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ள ‘பிக்பாஸ் சீஸன்3’நிகழ்ச்சி துவங்கி களைகட்டி வருகிறது. இதில் 17 போட்டியாளர்களுல்  ஒருவராக பிரபல டான்ஸ் மாஸ்டர் சேண்டியும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் சேண்டி பிக்பாஸில் கலந்து கொண்டதை அவரது முதல் மனைவியும் முந்தைய பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்

இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், பர்ஸ்ட் லவ்தான்  பெஸ்ட் லவ்வா? என கேள்வி எழுப்ப, சேண்டி எனது முதல் காதலர் கிடையாது, கடைசி காதலர் அவர்தான். நான் அட்டக்கத்தி தினேஷ் மாதிரி ...அடிக்கடி காதலர்களை மாற்றிக்கொண்டே இருப்பேன்’ என படு துணிச்சலாகப் பதிவிட்டிருந்தார். அதையும் விடாமல் துரத்திய இன்னொரு ஃபாலோயர் ’அப்ப இப்ப பண்ணிக்கிட்டிருக்கிறது எத்தனையாவது லவ்? என்று கேட்க,...’தப்பு தப்பு அதையெல்லாம் கணக்கு வச்சிக்கக் கூடாது. கண்ணு பட்டுடும்’ என்று பதிலளித்திருக்கிறார் காஜல்.