82 கிலோ முதல்... 352 கிலோ வரை..! 45 வயதிலும் ஒர்கவுட்டில் அசால்ட் செய்யும் ஜோதிகா! வெறித்தனமான வீடியோ!
நடிகை ஜோதிகா, தன்னுடைய ஒர்கவுட் பயணம் குறித்து விவரிக்கும் விதமாக வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், 90-ஸ் கிட்ஸ்ஸின் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர் ஜோதிகா. இவரின் குறுகுறு பார்வை, பப்லி முகம்... குறும்புத்தனமான நடிப்பு போன்றவற்றிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே தற்போது வரை இருந்து வருகிறது. கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக இருந்தபோதே, நடிகர் சூர்யாவை பல வருடங்கள் காதலித்து, பல்வேறு எதிர்ப்புகளை மீறி பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சூர்யா - ஜோதிகா இருவருமே தற்போது வரை இளம் காதல் ஜோடிகளை போல் வட்டமிட்டு வரும் நிலையில், இவர்களின் காதலுக்கு அடையாளமாக தியா, தேவ் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
திருமணம் ஆன பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகிய ஜோதிகா, குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படியான படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் இவர், கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி எண்டெர்டெயின்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் அடுத்தடுத்து சில தரமான படங்களை தயாரித்து வருகிறார்.
தமிழை தொடர்ந்து மலையாளத்திலும் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா மம்முட்டிக்கு ஜோடியாக 'காதல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. இதை தொடர்ந்து, இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். கணவர் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆன பின்னர்... சமீப காலமாக தீவிர ஒர்க் அவுட்டிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இதுகுறித்து அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் சில வீடியோக்களைபதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஜோதிகா, இன்று தனது ஒர்க் அவுட் பயணம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் பிரமிக்க வைத்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. அதாவது 45 வயதை நெருங்கும் நிலையிலும் ஜோதிகா, 82 கிலோ வெயிட் லிப்ட் செய்வதுடன் 352 கிலோவை கால்களால் பேலன்ஸ் செய்கிறார். இப்படி பல்வேறு ஒர்க்கவுட் செய்த ஜோதிகாவின் வீடியோ இதோ...