ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ வெற்றிச் செய்தி தியேட்டர்களிலிருந்து ஆன் த வே சூர்யா வீட்டுக்கு வந்து சேரும் முன்பே தனது சம்பளத்தை மும்மடங்கு உயர்த்திவிட்டாராம் ‘ஹலோவ்’ ஜோதிகா.

துவக்கத்தில் மாமனார் சிவகுமாரின் எதிர்ப்பு இருந்ததால் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்து வந்த ஜோதிகா, ராதாமோகனின் ‘காற்றின்மொழி’யில் கமிட் ஆனவுடனேயே இனி நான்ஸ்டாப்பாக படங்களில் நடிக்கவிருப்பதை அறிவித்து, தானே உட்கார்ந்த தானைத்தலைவன் மாதிரி சொந்தமாகக் கதையும் கேட்க ஆரம்பித்தார்.

அப்படி சொந்தமாக ஜோதிகா கேட்டு ஓ.கே செய்த கதைதான் புதியவர் ராஜ் இயக்க ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படம். ‘ காற்றின் மொழிக்கு வாங்கியதுபோலவே இப்படத்துக்கும் ஜோதிகா வாங்கியிருக்கும் சம்பளம் வெறும் ஐம்பது லகரங்கள்தான். 

தற்போது கூட ரிலீஸான ‘உத்தரவு மகாராஜா’ வந்த வேகத்திலேயே தியேட்டர்களிலிருந்து உத்தரவு வாங்கிக்கொண்டு திரும்ப, ‘திமிரு புடிச்சவன்’ சுமார் என்று ரிப்போர்ட் வர ‘காற்றின் மொழி’ இரண்டு வார ஹிட் அடிக்கும் என்று தகவல் வரவே, வரிசையாய் கதை கேட்கச்சொல்லி வரும் அழைப்புகளுக்கு முதல் நிபந்தனையாக 1.5 கோடி, அதாவது பழைய சம்பளத்தை விட மும்மடங்கு கோரி ஜெர்க் தருகிறார்களாம் ஜோதிகா தரப்பினர்.

நயன்தாராவுக்கு அடுத்த இடத்திலுள்ள த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் வகையறாக்களே இதே 1.5 கோடிக்குள்ளாகவே வாங்குகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.