Actress Jeevitha gives explanation for Rs. 26 crore cheating allegations : தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஜீவிதா தற்போது பண மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். அது குறித்து அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
வளைகாப்பு படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஜீவிதா 'தப்புக்கணக்கு'; 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு'; 'இனி ஒரு சுதந்திரம்'; 'ஏட்டிக்குப் போட்டி'; 'ராஜமரியாதை'; 'தர்மபத்தினி'; 'மௌனம் கலைகிறது'; 'மாருதி'; 'பிறந்தேன் வளர்ந்தேன்'; 'ஆயிரம் கண்ணுடையாள்'; 'இது எங்கள் ராஜ்யம்'; 'நானே ராஜா நானே மந்திரி'; 'சுகமான ராகங்கள்'; 'உறவைக்காத்த கிளி போன்ற பல்வே சத்யமேவ ஜெயதேறு தமிழ் படங்களில் படங்களில் நடித்துள்ளார்.
அதோடு தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த ஜீவிதா நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார். அதோடு இவர் இயக்குனராகவும் ஜொலித்து வருகிறார். இவர் இயக்கத்தில் தெலுங்கில் சேசுஎன்னும் படம் உருவானது. இந்தப் படம் தமிழில் பாலாவின் இயக்கத்தில் 'சேது'வின் மறு உருவாக்கமாகும். பின்னர் எவடந்தே நாகேண்டி, சத்யமேவ ஜெயதே, மகாங்களி உள்ளிட்ட படங்களையும் இயக்கினார். மேலும் பட தயாரிப்பிலும் இருக்கும் ஈடுபட்டுள்ளார். இவர் தயாரிப்பில் எவடந்தே நாகேண்டி, ஆப்த்துடு, மகாங்களி உள்ளிட்ட படங்கள் உருவானது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீவிதாவின் கணவர் ராஜசேகர், பூஜா குமார் நடித்த கருடவேக படம் திரைக்கு வந்தது. இந்த படத்தை தயாரித்த கோட்டீஸ்வர ராஜூ என்பவர் தயாரித்திருந்தார். தற்போது இந்த தயாரிப்பாளர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஜீவிதாவும் அவரது கணவர் ராஜசேகரும் தன்னிடம் ரூ. 26 கோடி கடன் பெற்றதாகவும், அதற்காக பூந்தமல்லி அருகே உள்ள 3 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து காசோலை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். அதோடு அந்த நிலத்தை தனக்கு தெரியாமல் வேறு ஒருவனுக்கு விற்று விட்டதாகவும் இதுகுறித்து கோர்ட்டில் வழக்குதொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜீவிதாவுக்கு பிடிவாதம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜீவிதா அளித்துள்ள விளக்கத்தில்; கோட்டீஸ்வர ராஜூ தெரிவித்துள்ள கருத்தில் உண்மை இல்லை. கருடவேக படத்துக்கு அவர்தான் தயாரிப்பாளர் பிறகு எப்படி அவர் எங்களுக்கு கடன் கொடுத்து இருக்க முடியும். அவர் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்க நினைக்கிறார் அதில் நான் சிக்க மாட்டேன் நான் பலவீனமானவன் அல்ல, வழக்கை சட்டப்படி சந்திப்பேன் யார் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தின் மூலம் தெரியவரும் என பகிரங்கமாக பதிலளித்துள்ளார்.
