குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயசுதா.

தற்போது, முன்னணி கதாநாயகர்களுக்கு அம்மா வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, 'செக்க சிவந்த வானம்' படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மனைவியாகவும், சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோருக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.

இவர் சினிமாவை தாண்டி, அரசியல் வாதியாகவும் இருந்து வந்தார்.  காங்கிரஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியில் இணைந்துள்ளார்.

ஜெயசுதா,  YSR காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து YSR  கட்சியில் இணைந்தார். வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து திட்டமில்லை என்றும், கட்சிப் பணி செய்ய  தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.