சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்த நடிகை சபர்ணா தற்கொலை நடந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீண்டு வராத பலருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது நடிகை ஜெயஸ்ரீயின் மரணம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவரும் சபர்ணாவை போலவே பூட்டிய வீட்டில் நிர்வாணா நிலையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடதக்கது . 

ஒரு சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில விளம்பரங்களில் நடித்துள்ள இவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் படுக்கையறையில் பிணமாகக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

முதல்கட்ட விசாரணையில் ஜெயஸ்ரீ தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜெயஸ்ரீயின் வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகளை காணவில்லை என அவரது சகோதரர் போலீஸில் தெரிவித்துள்ளார். இதனால் இவரை நகைக்கு ஆசை பட்டு யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.