தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் 70 மற்றும் 80 களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ஜெயப்பிரதா. தற்போது டிவி தொடர் ஒன்றில் மருமகளுக்கு துரோகம் செய்யும் மகனை கொலை செய்பவராக நடித்திருக்கிறார்.

இப்படி துணிச்சலான கதாப்பாத்திரத்தை  தேர்வு செய்து நடித்துள்ளது குறித்து ஜெயப்பிரதா கூறுகையில், "கணவர் எப்படி இருந்தாலும் மனைவி அனுசரித்துப் போக வேண்டும் என்றும் சமூகத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சொல்லித்தான் பல நூற்றாண்டுகளாக பெண்களை வளர்க்கிறார்கள். அப்படி பெண்களுக்கு புத்தி சொல்லி வளர்க்கும் பெற்றோர் மகனை அப்படி வளர்ப்பதில்லை.  மகனிடம் தவறு இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் மருமகளை கொடுமைப்படுத்தும் மாமியாரை தான் சமூகத்திலும் சினிமாவிலும், டிவி தொடர்களிலும், பார்க்கிறோம்.

மகனை கண்மூடித்தனமாக நம்புவது தவறு. பிறந்த வீட்டிலிருந்து செல்லும் பெண்களிடம் புகுந்த வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார்கள். அது தவறு இல்லை. அதுபோல் ஆண்களையும் நல்ல மருமகனாக, நல்ல கணவராக ,இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். நல்ல மனைவிகளை உருவாக்கும் நமது சமூகம் நல்ல கணவர்களை தயார் செய்வதில்லை. 

அந்த விஷயத்தில் தோல்வி அடைந்திருக்கிறது என்பது எனது கருத்து நல்ல கணவர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை ஆனால் அதிகம் இல்லை என்று தான் கூறுகிறேன் என கூறியுள்ளார்.