இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, இரண்டாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொழுதை எப்படி கழிப்பது என பிரபலங்கள் புலம்பி வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், முடிந்த வரை தங்களுடைய ரசிகர்களுடன் லைவ் சாட் செய்ய துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் பல பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஜெயா பட்டார்ச்சார்யா, மொட்டை அடித்து கொள்ளும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னுடைய தலை முடியை பராமரிப்பது மிகவும் சிரமமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய முடி திறமையை தீர்மானிக்காது, நடிப்பு தான் என்னுடைய திறமையை தீர்மானிக்கிறது  என புன்னகையோடு தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் தன்னுடைய தலையை மொட்டை அடித்துக்கொள்ளும் வீடியோவையும் ஜெயா பட்டாச்சார்யா வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது: