பிரபல நடிகை ஒருவர் கொரோனாவால், இறந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில் அவர் தான் இன்னும் உயிருடன்தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் இறந்து விட்டதாகவும், அவர்களுக்கு உடல் நலம் சரியில்லை என்பது போன்ற பல வதந்திகள் வருவதும், அதற்க்கு பிரபலங்கள் உண்மை நிலை என்ன என்பதை தெரிவிப்பதும் வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில், பாலிவுட் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயா பட்டாச்சார்யா. இவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததாகவும், சிகிச்சை பலனின்றி, இவர் இறந்து விட்டதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் காட்டு தீ போல் பரவியது. 

இந்த தகவலை உண்மை என நம்பி ரசிகர்கள் சிலர் இவருக்கு இரங்கல் தெரிவிக்கவும் துவங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ஜெயா பட்டாச்சார்யா, தான் உயிருடன் தான் இருப்பதாகவும், இது போன்ற தகவல்களை, உறுதி படுத்திய பின் வெளியிடுங்க என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.