Jacqueline Fernandez :நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு தப்பி செல்லும் போது மும்பை விமான நிலையத்தில் அமலாக்கத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். 

ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez)இலங்கையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையும் முன்னாள் இலங்கை அழகுராணியுமாவார். கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை அழகிப் போட்டியில் (மிஸ் ஸ்ரீலங்கா யுனிவேர்ஸ் என்னும் பட்டம் பெற்ற ஜாக்குலின் 2009ம் ஆண்டு வெளியான பாலிவுட் மூவி அலாதீன் படத்தில் நாயகியாக தோன்றியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பன்னாட்டு இந்திய ஃபிலிம் அகாதமி விருதினை 2010ம் ஆண்டு இவர் பெற்றிருந்தார்.

 அலாதீன்வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் செம பிஸியான ஜாக்குலின் தற்போது Bachchan Pandey , Attack, Vikrant Rona, Cirkus, Hari Hara Veera Mallu, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதர்க்கிடையே .தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்த வழக்கு விசாரணையில் நடிகை ஜாக்குலினும் உடந்தை என தெரியவந்தது. முதலில் தனக்கும் இந்த வழக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என ஜாக்குலின் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை ஜாக்குலின் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.

Click and drag to move

இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக வெளிநாடு செல்ல முயன்ற ஜாக்குலினை அமல்லக்க துறையினர் மும்பை விமான நிலையத்தில் மடக்கி பிடித்துள்ளனர். பண மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற ஜாக்குலினுக்கு தடை விதிக்கப்படுள்ளது.