நடிகையை படுக்கைக்கு அழைத்த ஹீரோ..!  பளீரென போட்டுடைத்த இஷா கோபிகர்...!

படத்தில் நடிக்க வேண்டுமென்றால் படுக்கைக்கு வரவேண்டுமென தன்னை அழைத்ததாக பிரபல நடிகை இஷா கோபிகர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மிகவும் பிரபல படங்களான ஜோடி, என் சுவாச காற்றே, காதல் கவிதை நரசிம்மா, நெஞ்சினிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இவர். அதன்பின்பு இந்தியில் நடிக்க சென்றுவிட்டார். மிகவும் பிஸியாக இருந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து சற்று தள்ளி இருந்தார்  என்றே சொல்லலாம்.

இந்த ஒரு நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க என்ட்ரி கொடுத்துள்ள இவர், இதனை பல்வேறு செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. இந்த ஒரு நிலையில் ஓர் சிறப்பு பேட்டியின்போது இதற்கு முன்னதாக அவர் சந்தித்த பல சவால்களை பற்றி மனம் திறந்துள்ளார். அப்போது, "இன்றைய நிலையில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்து இருந்தார்...

அதை நான் மறுத்தேன். அதனால் பல பட வாய்ப்புகளையும் இழந்தேன். அதுமட்டுமல்லாமல் மற்றொரு பிரபல நடிகருடன் அட்ஜஸ்ட் செய்தால் அதிக பட வாய்ப்புகள் வரும் என தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் பேசி இருந்தார். அவரை நான் திட்டி விட்டேன் என தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.