Actress Iniya ready to act open photo shoot
வாகை சூடவா படத்தில் அறிமுகமான நடிகை இனியா, போதிய அளவு வாய்ப்பு கிடைக்காததால் இனி கவர்ச்சி காட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வாகை சூடவா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இனியா. இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் இனியா மேக்கப்பில் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாக காட்சியளித்தார்.

இப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது. அனியாவுக்கு நல்ல நடிகை என்ற பெயரும் கிடைத்தது. இதையடுத்து இனியா ‘மவுன குரு’, ‘அம்மாவின் கைப்பேசி,’ ‘யுத்தம்செய்’, ‘மாசானி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
என்னதான் நல்ல படங்கள், கதா பாத்திரங்களில் நடித்தாலும் கவர்ச்சி காட்டவில்லை என்றால் எந்த நடிகையுமே தமிழ் திரையுலகில் காலம் தள்ள முடியாது என்பதை இனியா தற்போது தான் உணர்ந்துள்ளார்.

தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார் இனியா. ஆனாலும் தமிழலி உச்ச இடத்தை பிடிக்க முடிவு செய்துள்ள இனியா இனி கவர்ச்சி காட்டி நடிக்க முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து அவரது கவர்ச்சி படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இயக்குனர்கள் பார்வை அவர் மீது பட ஆரம்பித்து உள்ளது. முன்பு இந்தி நடிகைகள் போல் ஒல்லியாக இருந்த அவர் இப்போது கொஞ்சம் எடையும் கூடி இருக்கிறார்.
வாகை சூடவா’ பட நாயகி இனியா இழந்த மார்க்கெட்டைப் பிடிக்க இப்படியாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்
