*  இயக்குநர் ஏ.எல்.விஜய் சமீப காலமாக எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை. தொடர் தோல்விகள்தான். இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து அவர் எடுத்து வரும் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கணாரணவத் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக கங்கணாவின்  போட்டோ வெளியானது. ஆனால் அது ஜெ., போல் இல்லை என்று விமர்சனம் எழுந்த நிலையில், எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அர்விந்த்சாமியின் முதல் லுக் நேற்று வெளியானது. இதில் 50/50 அளவில்தான் அப்ளாஸ் வாங்கியுள்ளது. 

*  ’ஒல்லி பெல்லி’ என பெயர் பெற்றவர் நடிகை இலியான. தெலுங்கில் ஒரு காலத்தில் கலக்கியவர். தமிழில் சில முறை முயற்சித்தும் பெரிய ரவுண்டு வர முடியவில்லை. இந்த நிலையில் பாலிவுட் போன பொண்ணு, பெரிதாய் ட்ரை பண்ணியும் மீண்டும் மீண்டும்  தோல்வியே. இதற்கிடையில் லவ் ஃபெயிலியர் வேறு. இதனால் மீண்டும் டோலிவுட்டை குறிவைத்துள்ள இலி, இந்த முறை ஏகபோக கவர்ச்சியுடன் களமிறங்குகிறாராம். 
(தேவுடா)

*  சிம்பு மிக தீவிரமான அஜித் ரசிகராக இருந்தார். அதன் பின் ஒரு இக்கட்டான கட்டத்தில் அவருக்கு விஜய் உதவினார். இதனால் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர்,  விஜய்யின் தாறுமாறான ரசிகனாகிப் போய் விழா மேடைகளில் விஜய்யை புகந்து கொட்டினார். இந்த சூழலில், இப்போது சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் முக்கிய ரோலில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. நடிக்கிறார். 
(அப்பா யப்பப்பா)

*  மலையாளம், தமிழ், இந்தி என மூன்று மொழிகளிலும் வெகு பரிச்சயமான இயக்குநர் ப்ரியதர்ஷன். இவரது மகள் கல்யாணி தமிழில் தன் முதல் படமாக  சிவகார்த்தியுடன் இணைந்து ‘ஹீரோ’வில் நடித்தார். படம் அட்டர் ஃபிளாப். இந்நிலையில் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைந்துள்ளது பொண்ணு. 
(விரல் பேசுதான்னு பார்ப்போம்)

*  மாஸ் ஹீரோக்கள் தங்கள் படங்களின் இரண்டு ஷெட்யூல்களுக்கு இடைப்பட்ட நேரத்தில், அப்பட தயாரிப்பாளரின் காசில் வெளிநாடு சுற்றுவார்கள். ஆனால் தல அஜித்தோ வலிமை படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில் இப்போது வேலை மெனெக்கெட்டு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸுக்கு ஆளில்லா குட்டி விமானங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுத்து வருகிறார். போலீஸ் துறையோடு தல அஜித்துக்கு செம்ம நெருக்கம் உருவாகியுள்ளது. எல்லாம் ‘துப்பாக்கி சுடுதல் போட்டி’ மூலமாகதான். இப்போதெல்லாம் குட்டி விமானம் தொடர்பான எந்த நுணுக்க தகவலென்றாலும் தலயைதான் தேடுது தமிழக போலீஸ்.