ஒல்லி பெல்லி இடுப்பை கட்டி... தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையுமே வசீகரித்தவர், நடிகை இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழில், 'கேடி' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இந்த படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், இந்த படத்தில் நடித்த நடிகை தமன்னா மற்றும் இலியானா ஆகிய இருவருக்குமே பெரிதாக, தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  எனவே தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தினார். 

பின் நீண்ட இடைவெளிக்கு பின்,  நடிகர் விஜய் நடித்த 'நண்பன்' திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்திற்கு பின் இவருக்கு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் பாலிவுட் திரையுலகிற்கு அம்மணி துண்டு போட்டதால், கோலிவுட் வாய்ப்பை மறுத்துவிட்டார்.

இந்நிலையில், இலியானா சில வருடங்களாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ஆண்ட்ரு என்கிற புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து வந்தார். அவ்வப்போது,  தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஆண்ட்ரு எடுத்த தன்னுடைய புகைப்படங்களையும், வெளியிட்டு வந்தார்.

மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றியதால், பிரிந்து விட்டதாக கூறினர். இந்நிலையில் காதல் தோல்வியால் இலியானா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.

அதில் இருந்து மீளம் தொடர் சிகிச்சை பெற்றதாகவும், அதிக மாத்திரைகளை உட்கொண்டார். இதன் விளைவாக  உடல் எடை கூடியதாக அவரே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் திரையுலகத்தில் கவனம் செலுத்தி வரும் இவர் ஜிம்முக்கு சென்று, தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.

அடிக்கடி, விதவிதமான புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் இலியானா, தற்போது... தன்னுடைய வெண்ணை நிற பிகினி உடை போல் ஒரு உடையை அணிந்து பின்னழகு மொத்தத்தையும் வெளிப்படுத்தும் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.