450 ஆண்டு பழமைவாய்ந்த அரண்மனையில் ஆரம்பமானது ஹன்சிகாவின் கல்யாண கொண்டாட்டம்

மெஹந்தி விழாவுக்காக நடிகை ஹன்சிகாவும் அவரது வருங்கால கணவர் சோஹைலும் கையில் மருதாணி உடன் தயாராகும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றன.

Actress Hansika Motwani Marriage celebration kick starts with mehendi ceremony

தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை ஹன்சிகா. இவர் இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவிற்கு வருகிற டிசம்பர் 4-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். கடந்த மாதம் தனது வருங்கால கணவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஹன்சிகா. பாரிஸ் உள்ள ஈஃபில் டவர் முன் அவருடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமையான அரண்மனையில் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்... திருமணத்திற்காக நயன்தாரா செஞ்ச விஷயத்தை அப்படியே காப்பி அடிக்கும் ஹன்சிகா... என்ன பண்ணபோகிறார் தெரியுமா?

திருமணத்துக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தற்போது அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஹன்சிகா -சோஹைல் கதூரியா ஜோடியின் மெஹந்தி விழா நேற்று நடைபெற்று உள்ளது. இதற்காக ஹன்சிகாவும், சோஹைலும் கையில் மருதாணி உடன் தயாராகும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஹன்சிகாவ்ன் திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ளது. இவரது திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை முன்னணி ஓடிடி தளம் ஒன்று பல கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களது திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ஹன்சிகா... குடித்துவிட்டு தோழிகளுடன் அலப்பறை செய்யும் வீடியோ வைரல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios