திடீர் என ட்விட்டர் பிரபலம் ஒருவர் 'நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும்' படத்தின் நாயகி காயத்திரி பிரபல கிரிக்கெட் வீரை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்று பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சிகொடுத்தார்.

18 வயசு படத்தில் அறிமுகமாகி, 'நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் நடிகை காயத்திரி. இந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் அரை டஜன் படங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கடுகிறது.

சமீபத்தில் தான் இவர் நடித்த 'சித்திரம் பேசுதடி 2 ' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து அடுத்த வாரம் K- 13  திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் மாமனிதன், கென்னடி கிளப், மற்றும் உன் காதல் இருந்தால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் பிரபல ட்விட்டர் பிரபலம் இவருக்கும் பிரபல கிரிக்கெட் வீரருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறி, புகைப்படம் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.

அந்த பதிவில்... "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Andr e dwayne அவர்களின் மனைவி Jassym Loraவின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அதில் Andre நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட புகழ் காயத்ரியை திருமணம் செய்துள்ளார் என பதிவு போட்டுள்ளார். ஏனெனில் நடிகை காயத்ரியை போலவே அவர் இருப்பதால் அப்படி ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவை பார்த்து நடிகை காயத்திரியை ஷாக் ஆகி ஸ்மைலி போட்டு ரீ ட்விட் செய்துள்ளார்.

அந்த புகைப்படம் இதோ: