பிரபல நடிகை கவுதமி 1998க்கு பிறகு, சுமார் 25 ஆண்டுகளில் வெறும் ஏழு திரைப்படங்கள் மட்டுமே நடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் பிறந்து கோலிவுட் உலகில் 80களின் பிற்பாதி முதல் 90களில் இறுதிவரை டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் கௌதமி. 1987ம் ஆண்டு ஒரு சில கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், அதன்பிறகு 1988ம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "குரு சிஷ்யன்" திரைப்படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானார்.

அன்று தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் பல்வேறு திரை துறையில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் உள்ள டாப் கதாநாயகர்கள் அனைவருடனும் இவர் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் 1998ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காத கௌதமி தற்பொழுது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் :மாவீரன் பட விழாவுக்கு தொகுப்பாளர்கள் ரெடி.! சர்ப்ரைஸ் வீடியோ இதோ!

சரியாக சொல்லப்போனால் 1998க்கு பிறகு சுமார் 25 ஆண்டுகளில் இவர் வெறும் ஏழு திரைப்படங்கள் மட்டுமே நடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1998ம் ஆண்டு சந்திப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து, அடுத்த ஆண்டே அவரை விவாகரத்து செய்தார். பிறகு 2004ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசனை திருமணம் செய்து கொண்ட அவர், 2016ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். 

90களில் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர், தற்பொழுது சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஒரு சில சொகுசு கார்கள், ஓரிரு இடங்களில் சொந்தமான வீடு என்று வாழ்ந்து வரும் கௌதமி, நடிப்புடன் சேர்த்து தன்னுடைய Costume Designing பணியையும் சிறப்பாக செய்து வருகிறார். 

இதில் அவருக்கு மாதம் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது, சுமார் 50 கோடி சொத்து மதிப்பு இருந்தபொழுதும், முன்னணி நடிகையாக திகழ்ந்த இவரிடம் தற்பொழுது இருக்கும் இந்த சொத்து மதிப்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கவுதமி புற்றுநோயோடு போராடி அதில் இருந்து மீண்டு வந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படியுங்கள் : வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி... மாமன்னன் - 3 நாள் வசூல் இவ்வளவா?