பாலிவுட்டின் இளம் நடிகையான திஷா படானி, எம்.எஸ்.தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் பிரபலமானவர். திஷாவின் அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம். இவரது ஹாட் போட்டோஸைப் பார்த்து நெருப்பே இல்லாமல், சோசியல் மீடியாவில் தீப்பற்றுகிறது என்றால் பார்த்துக்கோங்க. 

அப்படி பிகினியிலும், கவர்ச்சி உடைகளிலும் ஹாட் போஸ் கொடுத்து இளைஞர்களை இம்சித்து வருகிறார் திஷா படானி. பிரபல இயக்குநர் மோகித் சூரி இயக்கத்தில் திஷா படானி, ஆதித்யா ராய் கபூருடன் ஓவர் நெருக்கமாக நடித்துள்ள மலங் திரைப்படம் பிப்ரவரி மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 

இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது திஷா படானியிடம், நீங்க யார் கூட காஃபி டேட்டிங் செய்ய விருப்பம் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுடன் டேட்டிங் செல்ல விருப்பம் என பொசுக்கென சொல்லிவிட்டார். 

இதோட இன்னும் ஒரு கூடுதல் தகவல் என்ன தெரியுமா?... பாலிவுட்டின் இளம் செக்ஸி குயினான திஷா படானி, இதுவரை ஹிந்தியில் 7 படங்களில் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ஒருமுறை கூட ஷாரூக்கானை பார்த்ததே இல்லையாம்.