உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை, நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என பாரத பிரதமர் மோடி, உரையில் தெரிவித்தார்.

மேலும் மார்ச் 22 தேதி அன்று (இன்று)  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்றும், சரியாக ஐந்து மணிக்கு அவரவர் வீட்டில் இருந்தபடியே, வெளியில் வந்து கைதட்டியும், மணி ஓசை எழுப்பியும், மக்களின் உயிரை காப்பாற்ற போராடி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதும் இடங்களில்கூட வெறிச்சோடி காணப்பட்டது. அதே போல் மக்கள் அனைவரும்,  மிகவும் அமைதியாக அவரவர் வீட்டில் இருந்தபடியே சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றினர்.

சரியாக 5 மணிக்கு மக்கள் பலர் வெளியில் நின்று கைதட்டி தூக்கம் இல்லாமல், மக்களுக்காக போராடி வரும்  மருத்துவர்களுக்கு தங்களுடைய நன்றியை தெரிவிக்கும் விதமாக கை தட்டினர்.

இதே போல்... நடிகை தேவயானி அவருடைய இரண்டு மகள்களுடன் தன்னுடைய வீட்டு வாசலில் நின்றபடி மணி ஓசை எழுப்பியும், கைத்தடியும் தன்னுடைய நன்றியை தெரிவித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.