தமிழ் திரையுலகில், குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை தேவயானி. குறிப்பாக அஜித், விஜய், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரை தொடர்ந்து தற்போது இவருடைய சகோதரர் நகுல் தமிழ் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். 

இந்த நிலையில் தேவயானி வீட்டில் நடந்துள்ள சோகம் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. நடிகை தேவயானி மற்றும் நகுல் ஆகியோர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். 


 
தாயாரை இழந்து தேவயானி, நகுல் குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவரின் மறைவு குறித்து அறிந்த பல பிரபலங்கள் தொடர்ந்து இவர்களுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.