Actress Devadarshni : பிரபல நடிகை தேவதர்ஷினி, 90ஸ் மனம் கவர்ந்த விடாது கருப்பு நாடகம் மூலம் கலையுலகில் கடந்த 1997ம் ஆண்டு களமிறங்கிவர் ஆவார்.
பிரபல நடிகை தேவதர்ஷினி விடாத கருப்பு, ரமணி vs ரமணி, எதுவும் நடக்கும், அண்ணாமலை, சிதம்பர ரகசியம், கோலங்கள் மற்றும் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 2 போன்ற பல வெற்றிகரமான நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஆவார். நாடகங்களில் நடித்து வந்த காலகட்டத்திலேயே தன்னுடன் நடித்து வந்த சக நடிகரான பிரபல நடிகர் சேத்தன் அவர்களை கடந்த 2002ம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்டார்.
இந்த சூழ்நிலையில் தான் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனராக தனது முதல் திரைப்படத்தை வெளியிட்ட கரு பழனியப்பனின் "பார்த்திபன் கனவு" திரைப்படத்தின் மூலம் அமுதா என்ற கதாபாத்திரத்தில் வெள்ளித் திரையில் அறிமுகமானார் தேவதர்ஷினி. அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தமிழக அரசு வழங்குகின்ற மாநில விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அன்று தொடங்கி இன்று வரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் இந்த 2023 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 96 திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற தனது மகள் நியதி கடம்பியுடன் இணைந்து, தளபதி விஜய் அவர்களுடைய லியோ படத்தில் வரும் "நான் ரெடி தான் வரவா" பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் தேவதர்ஷினி. தனது மகளுடன் அந்த வீடியோவை இணைந்து வெளியிட்டுள்ள அவர், தளபதி ரசிகர்களும் லியோ திரைப்பட ரசிகர்களும் தன்னை மன்னிக்க வேண்டும் என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
