நடிகை த்ரிஷா தன்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘டியர் நாம கல்யாணம் கட்டிக்கலாமா?’ என்று பிறந்தநாள் அதிர்ச்சி அளித்திருக்கிறார் பிரபல நடிகை ஷார்மி.

தமிழில் ‘காதல் கிசு கிசு’,’ஆஹா எத்தனை அழகு’,’லாடம்’ உட்பட பல படங்களில் நடித்தவர் சார்மி. பின்னர் தெலுங்குக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டார். இன்று 37 வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகையும் தனது நெருங்கிய தோழியுமான த்ரிஷாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் ...பேபி இன்னைக்கு மட்டுமல்ல என்னைக்குமே நான் உன்னை லவ் பண்றேன். என் காதலை ஏத்துக்கச் சொல்லி காலடியில விழுந்து கிடக்கிறேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாம். இப்பத்தான் அதுக்கு சட்டத்துலயே இடம் இருக்கே...என்று அதிர்வெடியாய்ப் பதிவிட்டிருக்கிறார்.

கிசு கிசு எழுதுகிற புண்ணியவான்களுக்கு த்ரிஷா பட்டியல்ல இன்னொரு கேர்ள் ஃப்ரண்ட் கிடைச்சாச்சு...